சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 பேருக்கு கொரொனா !

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:11 IST)
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மேலும், சரவணா ஸ்டோர்ஸ் 250 பேருக்கு கொரொனா தொற்று பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்