இந்தியா முழுவதும் தலை தூக்கியிருக்கும் மதப் பெரும்பான்மைவாத தேர்தல் அரசியல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாததற்கு காரணம் தந்தை பெரியார். மத ஆதிக்கம், சாதி, பெண்ணடிமைத்தனம் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தென்னகத்தை வழி நடத்திய தலைவர்.
தனது கொள்கைகளால் அவர் உருவாக்கிய அண்ணா போன்ற தலைவர்கள் சமூக நீதி அரசியலை தொடர்ந்தார்கள். சாமானியர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக வாழ்நாள் முழுக்க போராடிய போராளி அவர். இன்று அரசியலில் சாதி ஆதிக்கம், சமூகத்தில் ஆணவப் படுகொலைகள், தொடர் வன்கொடுமைகள் போன்றவற்றைச் சந்தித்து வரும் வேளையில் பெரியாரின் தேவை அதிகமாக உள்ளது.
அதில் ஒரு பகுதியாக, 'சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான தனி சட்டத்தையும்', பெரியாரின் வாழ்நாள் போராட்டமான 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் முறையையும்' முழுமையாக விரைந்து அமல்படுத்துவதே பெரியாருக்கு நாம் செய்யும் கடமையாகும்.