கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம்! – டெல்லி அரசு அறிவிப்பு!

வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:08 IST)
டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மேலும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் மாநில அரசுகள் கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் டெல்லியில் கொரோனாவால் இறந்த 7 ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி பேரிடர் மீட்பு நிதியத்தின் சார்பில் மேலும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பேரிடர் மீட்பு நிதியத்தின் நிவாரணத்தை பெற ஏற்கனவே மாநில அரசின் நிதியை பெற விண்ணிப்பித்த நபர்கள் தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்