ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அவசரம் ஏன் ?

வியாழன், 6 ஜனவரி 2022 (13:34 IST)
ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம், அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. 

 
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
பின்னர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள்? அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கம் இல்லை. ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குபதியவில்லை என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்