சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானமா?

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:16 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு சிஏஏ என்ற இந்திய குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தது என்பதும் இதற்கு தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் தெரிந்ததே
 
அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் பரவல் நேரத்திலும் இந்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் என்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்ட உள்ளதாக தகவல் வந்துள்ளது
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானத்தை இயற்ற உள்ளதாகவும் இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த மாதம் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிராகவும் சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்