குழந்தை இல்லாததால் மனைவி தற்கொலை; ஏக்கத்தில் கணவனும் தற்கொலை

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (08:19 IST)
குழந்தை இல்லாத சோகத்தில் மனைவி மற்றும் கணவன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருமே மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் இனியும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனையடுத்து வீடு திரும்பிய சந்திரன், சுகன்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சுகன்யாவின் பிரிவை தாங்க முடியாத சந்திரன், மனைவி இல்லா உலகத்தில் வாழ முடியாது எனக் கருதி அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
விஷயமறிந்து வந்த காவல் துறையினர், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்