வெள்ளக்காடான சென்னை: 11 சுரங்கபாதைகள் மூடல்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (08:37 IST)
தொடர் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. 

 
கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது அது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்பது தெரிந்ததே. இந்நிலையில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த  தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 
 
இதனால் சென்னை மாநகர் முழுவதும் பரவலாக 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறதூ. இதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையின் பெரும்பாலன பகுதியில் முந்தடையும் ஏற்பட்டுள்ளது. 
 
தொடர் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வியாசர்பாடி, கணேசபுரம், அஜாக்ஸ், கெங்குரெட்டி, மேட்லி, துரைசாமி,  பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. மேலும் 7 முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்