வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது!

வியாழன், 11 நவம்பர் 2021 (08:09 IST)
மாமல்லபுரம் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே அதாவது சென்னை அருகே மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என தகவல். 

 
கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது அது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்பது தெரிந்ததே. இந்நிலையில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த  தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துகொண்டு இருக்கிறது. ஆனால் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாகப்பட்டினம் பகுதியில் நகர்ந்து வந்ததால் சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் நேற்று பெரிதாக மழை இல்லை. 
தற்போது நிலவரப்படி வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் தெற்கு நோக்கி நகர்ந்து சென்று வலுவிழக்க தொடங்கும். பின்னர் அது மாமல்லபுரம் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே அதாவது சென்னை அருகே மேற்கு நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு அதி கனமழை பெய்யும் என்பதால் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்