ஊரக உள்ளாட்சி தேர்தல்: Voter ID இல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (11:40 IST)
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்ட அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, எம்.பி., எம்.எல்.ஏ., அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்