கமல்ஹாசனின் ’விக்ரம் ’பட புதிய அப்டேட்! புகைப்படம் வைரல்

சனி, 2 அக்டோபர் 2021 (22:54 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம் ‘ இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது தெரிந்ததே.

 
இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தைப் பற்றிய புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் 2 வது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படக்குழுவினருடன் ஒரு பைக்கில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Marana Mass #Ulaganayagan #KamalHaasan with his young #Vikram crew

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்