அமைச்சர் உறவினர்களுக்கு மட்டும் ஆடுகளா? முற்றுகையிட்ட பொதுமக்கள்

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (21:45 IST)
கரூரில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உறவினர்களுக்கு மட்டும் ஆடுகளா? என அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அலட்சியமாக பதில் அளித்த மாவட்ட திட்ட அலுவலரை முற்றுகையிட்டு மக்கள் சிறைபிடித்தனர்.
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், ஒரு நபருக்கு சுமார் 13 ஆயிரம் மதிப்பில் 181 நபர்களுக்கு சுமார் ரூ 23 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியினை துவக்கி வைத்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, அதே பகுதியை சார்ந்த பொதுமக்கள், அ.தி.மு.க.விலேயே ஒரு சிலருக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்குவதாகவும், அமைச்சரின் உறவினர்களுக்கு மட்டுமே விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாகவும் கூறி விழா மேடையிலேயே அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
பொதுமக்கள், அமைச்சரிடம் கேள்வி கேட்டு நியாயம் கேட்ட போது அடுத்த முறை கொடுப்பதாக கூறி விட்டு இடத்தை விட்டு வெளியேறினார்.  இந்நிலையில் மாவட்ட திட்ட அதிகாரி கவிதாவினை பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்ட போது, அலட்சியமாக பதில அளித்த திட்ட அலுவலர் கவிதாவினை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்