தினகரனுக்கு குக்கர் சின்னம் ; கரூரில் கொண்டாட்டம் : வீடியோ

வெள்ளி, 9 மார்ச் 2018 (16:59 IST)
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதையடுத்து கரூரில் அ.தி.மு.க அம்மா அணியினர் வெடி வைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 
அ.தி.மு.க அம்மா அணி துணை செயலாளரும், ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ-வுமான தினகரன் அணிக்கும், முதல்வர் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகியது. 
 
அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க  தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் படி, தினகரனின் ஆதரவாளர்கள் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கரூர் பேருந்து நிலையம் வந்து, அங்கே பட்டாசுகள் வெடித்ததோடு, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். 
 
ஊர்வலத்தில் குக்கர் ஏந்தியபடி பெண்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்., பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிய காட்சி கரூர் நகரமே விழாக்கோலம் கட்டியது போல் அமைந்தது.
-சி.ஆனந்தகுமார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்