முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து வைத்துள்ள மீனில் சிறிதளவு உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பின்னர் ஒரு கடையில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும், பூண்டு சேர்க்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். மசாலா புளிகரைசலுடன் சேர்ந்து கொதித்து கெட்டியானதும் மீனை சேர்க்கவும். மீன் வெந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் மீன் குழம்பு தயார்.