செய்முறை:
முதலில் முந்திரியை எடுத்து நெய் விட்டு நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு தர்ப்பூசணியில் உள்ள சிவப்புச் சதைப் பகுதியை தனியாக எடுத்து விதைகளை மட்டும் நீக்கிவிட்டு, துண்டாக்கி, மிக்ஸில் போட்டு கூழாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையானவெல்லத்தை இடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெல்லக் கரைசலை போட்டு பாகு காய்ச்சி பாதிபதம் வந்த பின்பு, இதனுடன் தர்ப்பூசணிக் கூழ் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைக்கவும். இடையில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி, நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு நன்றாக வெந்து ஒட்டாமல் சுருண்டு வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு போட்டு இறக்கவும்.