சுவை மிகுந்த முட்டை மசாலா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 5
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி
இலை - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:
 
* முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும். தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
 
* வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும்  வரை வதக்கவும்.
 
* பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும். சுவை மிகுந்த முட்டை மசாலா தயார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்