இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கண் கண்ணாடி அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதைச் சரியாக பராமரிக்க முக்கியமான வழிமுறைகள் உள்ளன:
கண்ணாடிகளை பாதுகாப்பாக வைப்பது: கண் கண்ணாடியை பயன்படுத்தாத நேரங்களில் அதன் சிறப்பு உறையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், கண்ணாடி பகுதி நேரடியாக மேசையை தொடாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
சரியாக அணிந்து கழற்றுவது: கண்ணாடியை கழற்றும் போது, இரண்டு கைகளாலும் பிரேமின் இரு முனைகளில் பிடித்து அகற்ற வேண்டும். ஒரே கையால் கழற்றும்போது மெல்லிய பிரேம்கள் வளைந்து போகவும், உடையும் வாய்ப்புகளும் அதிகம்.
தூய்மையாக பராமரிப்பு: கண் கண்ணாடிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் பயன்படுத்தும் முன் மென்மையான துணியால் நன்கு துடைத்தால், தூசியிலிருந்து பாதுகாக்கலாம்.
சரியான பொருத்தம்: காலப்போக்கில் கண்ணாடியின் இணைப்புகள் தளரலாம், எனவே அவற்றை அவ்வப்போது சரிபார்த்து, முகத்தில் நன்றாக பொருந்தும்படி திருத்திக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பயன்பாடு: ஒருவர் பயன்படுத்தும் கண் கண்ணாடியை மற்றொருவர் அணியக் கூடாது. இதனால் அளவுகள் மாறி, உரிய நபருக்கு அணியும்போது பொருந்தாமல் பாதிப்பு ஏற்படக்கூடும்.
கண்ணாடிகளை சரியாக பராமரிப்பது, நீண்ட நாள் பயன்பாட்டிற்கு உதவுவதோடு, கண்களின் பாதுகாப்புக்கும் முக்கியமானது.