சிக்கனை அலசி மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறுது தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். பிறகு குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் சிறுது நேரம் குறைந்த தணலில் வத்த வைத்து ஆறிய பிறகு பிளண்டரில் சிக்கனை மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு - 2 பெரியது (வேக வைத்தது), வேக வைத்த உகிழங்கை தோல் நீக்கி மசித்து வைக்கவும். வெங்காயம் - 1 பெரியது (பொடியாக நறுக்கியது), பச்ச மிளகாய் - 1, கொத்தமல்லி - ஒரு கைபிடி, உப்பு - தேவையான அளவு.
மசித்த சிக்கனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், பொடிசாக நறுக்கிய கொதத மல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும். முட்டை 2 வெள்ளை கரு மட்டும் இதனுடன் மிளகு தூள் சிறிது, பிரெட் க்ரம்ஸ் தேவைக்கு ஏற்ப எடுத்து கொல்லவும்.
பிறகு தட்டி வைத்த சிக்கனை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் க்ரம்ஸ்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கட்லெட் தயார்.