சுவை மிகுந்த பாதுஷா செய்ய தெரிந்து கொள்வோம்...!

தேவையான பொருட்கள்:
 
மைதா - 1 1/2 கப்
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
 
பாகு செய்வதற்கு:
 
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
 
மைதா பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு  கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும். மாவை மிருதுவாகவும், கெட்டியாகவும் பிசையவும். தேவைப்பட்டால் மட்டும் சிறுது நீர்  தெளித்துக் கெட்டியாக பிசையவும். குறைந்தது 15 நிமிடமாவது பிசையவும்.
 
பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஓரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டி நடிவில் சற்று விரலால் குழிபோல் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைத்து அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும். பாதுஷா மேலே எழும்பி வரும்போது மீண்டும் அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பொரித்த பாதுஷாக்களை சூடான பாகில் 5 முதல் 10 நிமிடங்கள் போட்டு எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்