சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

Mahendran

சனி, 10 மே 2025 (17:30 IST)
நாம் வாழும் நகர வாழ்க்கையில் உணவு மற்றும் தூக்க நேரம் கலைந்து போயிருக்கிறது. இது உடல்நலத்தை பாதிக்கும் முக்கிய காரணமாக மாறியுள்ளது. அதனால் உணவுக்கு நேர ஒழுங்கு தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் சரியான உணவுகள் எடுத்து கொண்டால் மட்டுமே உடல்நலம் மேம்படும். அதுகுறித்து தற்போது பார்போம்.
 
உடல் ஒரு இயந்திரம் போல. அதை இயக்க உணவு அவசியம். உணவை காலத்தில் உண்பதே உடலுக்கு சிறந்தது.
 
மூன்று முக்கிய அடிப்படை:
சரியான உணவு
 சரியான நேரம்
சரியான அளவு
 
 காலை உணவு (7am - 9am):
முழுதானியங்கள், கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகள் சாப்பிட வேண்டும்.
 
மதிய உணவு (மிகபட்சம் 2pm வரை):
கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்பு, புரதம் – அனைத்தும் உள்ளதுடன் காய்கறி, மீன், முட்டை, கீரை சேர்க்கலாம்.
 
இரவு உணவு (8:30pm குள்):
எளிதில் செரிக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். உறங்கும் நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பே உணவாக இருக்க வேண்டும்.
 
இடைவேளை சிற்றுண்டி:
காலை–மதியம் மற்றும் மதியம்–இரவு இடையே தேவையான அளவில் உணவு. நேர இடைவெளி – குறைந்தபட்சம் 4 மணி நேரம்.
 
சமயத்திற்கு ஏற்ப உணவு:
பருவத்திற்கேற்ற பழங்கள், காய்கறிகள், இயற்கை பானங்கள் (இளநீர், எலுமிச்சை சாறு) முக்கியம்.
 
தவிர்க்க வேண்டியவை:
பாதிப்பான பானங்கள், எண்ணெயில் பொரித்தவை, பாக்கெட் உணவுகள் – வெயில் நாட்களில் தவிர்க்க வேண்டும்.
 
 நேரம் பார்த்து உண்பது என்றென்றும் நம் உடலுக்கு நல்லதுதான். சிறிய மாற்றங்கள், பெரிய ஆரோக்கிய நன்மைகளை தரும்!
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்