அன்றாட உணவில் பச்சைப்பயறை சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள் !!

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:44 IST)
பாசி பயறில் பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பாசி பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.


பச்சை பயறு, பாசி பயறு என்று அழைக்கப்படுகிறது. வைட்டமின்கள் பி 2, பி 3, பி 5, பி 6 மற்றும் செலினியம் உள்ளது. அவை ஃபெனிலலனைன், லியூசின், ஐசோலூசின், வாலின், லைசின், அர்ஜினைன் மற்றும் பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்தவை.

பாசி பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது. பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுவதற்கு கெட்ட கொழுப்புகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாகும்.

இரத்த குழாய்களில் உண்டாகும் காயங்களைச் சரிசெய்வதோடு வீக்கத்தையும் குறைக்கிறது. மேலும் பாசி பயறு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்