எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள பாகற்காய் !!

வியாழன், 26 மே 2022 (14:54 IST)
பாகற்காயில் இரண்டு வகை என்றாலும் இரண்டின் பயன்களும் ஒரேமாதிரியாக அமைந்துள்ளது. இரண்டும் கசப்புத்தன்மை உடையன. இதில் பலவிதமான வைட்டமின் சத்துகளும், மினரல் சத்துகளும், உப்புச் சத்துகளும் ஏராளமாக இருக்கின்றன.


தினமும் காலையில் ஒரு அவுன்ஸ் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் பாகற்காயில் கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதினால் நீரிழிவு நோய்க்கு இது அற்புதமான மருந்தாகும்.

ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. எனவே தினமும் காலையில் துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவுகிறது. மேலும் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

பாற்காயையோ, அதன் இலைகளையோ போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால் வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

பாகற்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். நல்ல பசியை ஏற்படுத்தும். மலச்சிக்கலை நீக்கும். பித்தத்தைப் போக்கும். வயிற்றுப்புண் ஆற்றும். இது இரத்தத்தைச் சுத்தி செய்யும். இரத்த விருத்தி உண்டாக்கும். எலும்புகள் சக்தி பெறும்.

மிதி பாகற்காய் விஷமுறிவாகப் பயன்படுகிறது. உடலில் விஷக்குறி தோன்றும்போது இதனை அடிக்கடி உண்டு வந்தால் விஷக்குறி மறைந்து உடல் நலம்பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்