காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை கிடைக்கும் என்றால் தினமும் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முட்டை அவிக்கும் போது அதில் உள்ள ஓடுகள் தண்ணீரில் கால்சியத்தை கலந்து வெளியிடுவதாகவும் இது தாவரங்களுக்கு ஊட்டம் அளிக்கும் உரமாக மாறுவதாகவும் கூறப்படுகிறது.
முட்டையை அவித்த தண்ணீரை தாவரங்களுக்கு ஊற்றுவதால், ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக கிடைக்கும் என்றும் இதனால் தக்காளி, மிளகு போன்ற கால்சியம் கொடுக்கும் தாவரங்கள் மிகவும் நன்றாக வளரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முட்டையை அவித்த தண்ணீரை குளிர்வித்து அதன் பின்னர் தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கு தாராளமாக பயன்படுத்தலாம் என்றும், இதன் காரணமாக செடிகள் ஆரோக்கியமாக வளரும் என்றும் எந்த பூச்சிகளும் அண்டாது என்றும் கூறப்படுகிறது.