பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான பலன்கள்..!

Mahendran

சனி, 25 ஜனவரி 2025 (17:00 IST)
ஆப்பிள் என்றாலே நமக்கு சிவப்பு ஆப்பிள் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் பச்சை நிறத்தில் உள்ள ஆப்பிள் சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் அதிகமாக உள்ளது.
 
தினமும் ஒரு பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படாது என்றும் இது கரையக்கூடிய நார்ச்சத்தை உள்ளடக்கியதால், கொழுப்பு அளவை குறைக்க உதவிடும் என்றும் கூறப்படுகிறது.
 
பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படும். இது செரிமான செயல்பாட்டிற்கும் உதவி செய்யும்.
 
பச்சை ஆப்பிளை காலை அல்லது மதிய உணவுக்கு பின்னர் சாப்பிடலாம். ஆனால் இரவில் சாப்பிடுவது சில சமயங்களில் இடையூறுகளை ஏற்படுத்த கூடும்.
 
மேலும், பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் ஆஸ்துமா அபாயம் குறையும் என்றும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்