உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Mahendran

புதன், 22 ஜனவரி 2025 (19:17 IST)
ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்கள் கருப்பு பிளாஸ்டிக் டப்பாவில் பேக்கிங் செய்து அனுப்பப்படும் நிலையில் இந்த டப்பாக்களை பயன்படுத்துவது சுகாதாரக் குறைவு என்று கூறப்படுகிறது.
 
சமீபத்திய ஆய்வில் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85 சதவீதம் நச்சு பொருட்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது என்றும் கருப்பு பிளாஸ்டிக் சூடான உணவை வைத்தால் நச்சு ரசாயனங்கள் உணவில் கலந்து விடும் என்றும் கருப்பு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
கருப்பு பிளாஸ்டிக்கில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் தன்மை உடையது என்றும் இதுபோன்ற பேக்கிங்கில் செய்யப்பட்ட உணவுபொருட்களை  அடிக்கடி உட்கொள்வதால் உடலுக்கு நச்சுத்தன்மை அதிகரிக்கும் என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்