எளிதில் ஜீரணமாகும் மருத்துவ குணங்கள் நிறைந்த மங்குஸ்தான் பழம் !!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (11:21 IST)
மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.


மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரெடிகல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.

மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் உதவுகின்றன.

மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
இதய வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது பக்கவாதம் மற்றும் இதயவியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க வைட்டமின் A, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியம். மங்குஸ்தான் பழத்தில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே, மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்