எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளை கொண்ட ஆப்பிள் !!

சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:16 IST)
இயற்கை ஸ்டீராய்டு என்று அழைக்கப்படும் பயோட்டின்  ஊட்டச்சத்து ஆப்பிள் பழத்தில் உள்ளது. இந்த பயோட்டின் உங்கள் முடி வளர்ச்சிக்கு மிகவும்  உதவிகரமான ஊட்டச்சத்தாகும். எனவே வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை பெற ஆப்பிள் மிகவும் உறுதுணையான பழமாகும்.


முகச்சுருக்கங்களை போக்க ஆப்பிள் பழம் ஒரு சிறந்த நிவாரணி என்றே சொல்லலாம். ஆப்பிளை அரைத்து தொடர்ந்து சில நாட்கள் உங்கள் முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி சருமம் புதுப்பொலிவு பெறும்.

ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இதயம் சார்ந்த நோய்களில் இருந்து உங்களை காக்க மிகவும் உதவும். குடல் புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க ஆப்பிள் பழம் மிகவும் உதவுகிறது.

தினமும் இரண்டு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ள பெரிதும் உதவும். நமது ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது.உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்ல பயனளிக்கும்.

ஆப்பிள் பழத்தில் உள்ள 'வைட்டமின் சி' இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒன்று. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தும் மிகவும் உறுதுணையானதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்