வால்நட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

சனி, 20 ஆகஸ்ட் 2022 (17:56 IST)
வால்நட் பருப்பு சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வால்நட்டை தொடர்ந்து சாப்பிடுவது நல்ல பயனை அளிக்கும்.


மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வால்நட் மிகவும் உதவுகிறது. மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளோடு, வால்நட்டையும் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். வயது முதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வால்நட் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வால்நட் சாப்பிடுவது நல்லது.

பாலியல் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்திட வால்நட் உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகள் வால்நட் சாப்பிட்டு வருவது நன்மை தரும்!

வால்நட் பருப்பில் ஒமேகா 3 உள்ளிட்ட நல்ல கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க இது உதவும். மேலும் மிகவும் ஒல்லியான உடல் உடையவர்கள் சற்று உடல் எடையை அதிகரிக்கவும் வால்நட் பருப்பு உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வால்நட் பயன்படுகிறது. எனவே ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்