சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளை நீக்கும் கரிசலாங்கண்ணி !!

Webdunia
அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும்  இருக்கிறது.

கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய  ஆரம்பிக்கும்.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
 
கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி நல்லெண்ணெய் 100 மி.லி அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்ந்து காய்ச்சி 5 மி.லி வீதம் காலையும், மாலையும்  சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.
 
கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக  வளரும்.
 
இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில்  மேலும், கீழும் விரல்களால் தேய்த்து வந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.
 
சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்ப்படுகிரவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்