கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக தோன்றும் இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளை நிறத்திலும் பூ பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
கரிசலாங்கண்ணி கீரை கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சூரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும் எராளமான தாதுசதுக்களும் இந்த கீரையில் உள்ளன.
அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சாம் அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி நல்லெண்ணெய் 100 மி.லி அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்ந்து காய்ச்சி 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.