சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை முற்றிலுமாக வெளியேற்ற உதவும் வெந்தயம் !!
அதிகமாக வெந்தயத்தை உட்கொண்டால் உங்களுக்கு இருமல், வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை, வாந்தி உணர்வு, சிறுநீரில் அதிக துர்நாற்றம் என பல பிரச்சினைகள் ஏற்படும்.
வெந்தயத்தின் உள்ளே இருக்கும் கூட்டுப் பொருட்களால் சில பேருக்கு அலர்ஜிகள் ஏற்படலாம். இதன் விளைவாக அவரது உடலில் அல்லது தோலில் சிவப்பாக வீக்கம் ஏற்படலாம். இது பெரும்பாலனோருக்கு ஏற்படுவதில்லை என்றாலும் சிலருக்கு ஏற்படுகிறது.
வெந்தயத்திற்கு உடல் எடையை குறைக்கும் சக்தி உண்டு. வெந்தயத்தை சாப்பிட்டால் அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையை குறைக்க உதவும்.
சீறுநீரக கற்கள் காரணமாக அதிக வலி ஏற்படும்போது வெந்தயத்தை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படும். வலியும் குறைந்து விடும்.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 24 வாரங்கள் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது.
சர்க்கரை நோயுள்ள ஒருவர் சர்க்கரை நோயின் மருந்துகளோடு இந்த வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால் அவருடைய உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது. அதன் காரணத்தால் அவருடைய உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்.
தேவைக்கு அதிக அளவு வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு தேவை இல்லாமல் வியர்வைகள் ஏற்படும். அதே சமயத்தில் நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது உங்கள் சிறுநீரில் துர்நாற்றம் அதிகமாக வீசும்.