கோடைகாலத்தில் நீர்ச்சத்துக்களை பெற இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள்...!

Webdunia
கோடைகாலத்தின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், உடல் வறட்சியைப் போக்குவதற்கு ஒரே வழி, நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள்,  காய்கறிகள், தண்ணீர் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் தண்ணீர் அதிகம் பருகினாலே உடல் வறட்சியை  தவிர்க்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் உடலில் நீர்ச்சத்துக்களை அதிகரிக்க பழங்களோடு, காய்கறிகளையும் சேர்க்க வேண்டும்.
டைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதனை கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலு இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் இதர சத்துக்களான லூடின், பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது.
 
வெள்ளரிக்காய் பற்றி சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. மேலும் கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் அதிகம் விற்பதால், இதனை அவ்வப்போது அதிகம்  சாப்பிடுவது, உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். இந்த பச்சை இலைக் காய்கறிகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இதனை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
கேரட் உடல் முழுவதற்கும் நன்மை தருகிறது. அத்தகைய நன்மைகளில் உடல் வறட்சிளை நீக்கி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை  குறைக்க விரும்புவோர், அதனை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
 
தக்காளியில் 93% தண்ணீர் மற்றும் லைகோபைன் என்னும் உடலை சுத்தம் செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை வெயில் காலத்தில் அதிகம் சாப்பிட, முகம் பொலிவோடு இருப்பதோடு, வறட்சியின்றியும் இருக்கும். முள்ளங்கியும் உடல் வறட்சியை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதனை சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையையும் சரிசெய்யலாம்.
வெயில் காலத்தில் சாலட் அதிகம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. அதிலும் செலரிக்கீரை மற்றும் சாலட்களில் லெட்யூஸ் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை  குறைவதோடு, உடலும் வறட்சியின்றி இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்