இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

Mahendran

புதன், 18 டிசம்பர் 2024 (19:01 IST)
இரவில் தூக்கம் வரவில்லை என்பது பெரும்பாலானோருக்கு பிரச்சினையாக இருக்கும் நிலையில் அந்த பிரச்சனையை தீர்க்க மூன்று வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் தூக்கம் வரும் என்று கூறப்பட்டு வருகிறது அவை என்னன்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
1) இரவில் நீல ஒளியை தவிர்த்து மங்கலான சிவப்பு நிறம் உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது சிறந்தது.  
 
2) படுக்கைக்கு செல்லும் முன் மூன்று மணி நேரத்திற்கு முந்தையதிலிருந்து டி.வி., கணினி, மொபைல் போன் போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  
 
3) இரவு நேரத்தில் வேலை செய்வோராயினும், அல்லது அதிக அளவில் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவோராயினும், நீல ஒளியைத் தடுக்கக்கூடிய கண்ணாடிகள் அணியவும் அல்லது இரவில் நீல மற்றும் பச்சை ஒளி அலைகளை வடிகட்டும் பாதுகாப்பு கருவியைப் பயன்படுத்தவும்.  
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்