வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு, நீர் சத்து அதிகம் இதனால் உடல் எடை அதிகரிக்காது, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும், இதனால் எளிதாக யாரும் சோர்வடைய மாட்டார்கள்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் வெள்ளரிக்காய், உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை அகற்ற உகந்த உணவாகும். சீராக உணவில் வெள்ளரிக்காய் சேர்த்துக் கொள்வது சிறுநீரக கற்கள் உண்டாகாமல் பாதுகாக்க பயனளிக்கும்.
மேலும், வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின் எ, பி, மற்றும் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை சக்தியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. வெள்ளரிக்காயில் 12% வைட்டமின் சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொட்டாசியம், மெக்னீசியம், சிலிகான் போன்ற மினரல் சத்துக்கள் கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் சருமத்திற்கு நல்ல பயன்கள் அளிக்கிறது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் டோன், ஸ்மூத்னஸ் என எல்லா வகையிலும் சரும நன்மைகள் பெறலாம்.
வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும், இரத்த அழுத்தம் சீராகும், கொலஸ்ட்ரால் குறையும். சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.