இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா சீரகம்.....!

Webdunia
சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து சிறிது  நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம், உடற்சூடு, மேகத்தழும்பு ஆகியன குணமாகும்.
 
மிளகு, சீரகம் இரண்டையும் சம அளவு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு தேனில் குழைத்தோ அல்லது வெந்நீருடனோ  சேர்த்து வாப்பிட அஜீரணத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலி, பித்த மயக்கம் ஆகியவை போகும்.
 
சீரகத்தை அரைத்து களியாகக் கிண்டி கட்டிகளின்மேல் வைத்துக் கட்ட கட்டியினால் ஏற்படும் உஷ்ணத்தையும், வலியையும்  போக்குவதோடு வீக்கமும் வற்றும். 
சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத் துன்பம் தரும் வாந்தி குணமாகும்.
 
ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும். வயிற்றில் அமிலச் சுரப்பு  அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று  அதன் சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும்.
சீரகம், இந்துப்பு இரண்டையும் சேர்த்து மைய அரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச்  சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி  மறையும்.
 
ஒரு கரண்டி அளவு சீரகத்தைப் பொடித்து அதனோடு சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டு உடன் துணை  மருந்தாக மோரை உட்கொள்ளச் செய்து  உடல் வியர்க்கும் வரை வெயிலில் இருக்கச் செய்ய காய்ச்சல் தணியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்