கோடைகாலம் வந்தாலே வெயில் சுட்டெரிக்கும். அதனால் வியர்த்து கொட்டும். இதையொட்டி உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதுடன், சொரி, சிரங்கு, தேமல், படர் தாமரை, கொப்பளங்கள், அம்மை போன்ற தோல் நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர வெயிலின் தாக்கத்தால் தோல் வறண்டு சாதாரணமாகவே அரிப்பு உண்டாகும்.
சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும், முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்க்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு சூடாக்கி அந்த நீரல் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும்.