வறண்ட சருமத்தை குணப்படுத்த உதவும் அவகாடோ !!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (10:01 IST)
அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது.


அவக்காடோ பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் E மற்றும் வைட்டமின் C ஆகிய ஊட்டச்சத்துக்களின் மிகச்  சிறந்த ஆதாரமாகவும் இருக்கிறது.

அவக்காடோ சருமத்திற்கு புத்துயிரூட்டுவதிலும், ஆரோக்கியமாக வைத்திருப்பத்திலும் மிகப் பெரியப் பங்கு வகிக்கின்றன. வறண்ட சருமத்தின் மிகப் பெரிய பாதுகாவலனாக இந்த  அதிலும் அவக்காடோ பழங்கள் விளங்குகின்றன.

நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

வறண்ட சருமத்தை வலுப்படுத்த உதவுவதற்கு, இவற்றை மேல்பூச்சாக தடவிக் கொள்ளலாம். இது எண்ணெய் சுரப்பிகளை சரியாக இயங்க வைக்க செய்கிறது, ஆகையினால், இந்த அவக்காடோ பழங்களைச் உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் நீங்கள் சேர்த்துக் கொண்டால், அவை உங்கள் வறண்ட சருமத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் சரும்ம் வறண்டு போகாமல்த் தடுக்கவும் உதவும்.

நல்லக் கொழுப்புச் சத்துக்களை உடைய இந்த அவக்காடோ பழங்களைக் மேல்பூச்சாக பயன்படுத்தும் போது, இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்த உதவும். இதன் விளைவாக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைந்து, சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

அவக்காடோ பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால், அவை வெகு விரைவாக சருமத்தை குணப்படுத்துவதற்கு துரிதப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் மீது மேல் தடவப்படுவதால், உலர்ந்த, செதில் செதில்களாக பிளந்த மற்றும் வீக்கமடைந்த சருமத்தை குணப்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்