தொடர்ந்து அத்திப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா...?

வியாழன், 12 மே 2022 (09:52 IST)
அத்திப் பழம் சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.


அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைய உள்ள பழங்களை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும்.

அத்திப்பழ மரத்தின் இலைகளிலும் நார்ச்சத்து உள்ளதால் இலைகளை சாப்பிதுவதன் மூலம் இன்சுலின் சுரப்பதை சீராக வைத்து கொள்ள முடியும். மேலும் வேகமாக ஜீரணம் ஆகிறது. இது மூல நோய் வராமல் தடுக்க வழி செய்கிறது.

அத்திபழத்தில் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய இருக்கிறது. அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும். உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இளப்கி வெளியேறும்.

தொடர்ந்து அத்திப்பழம் உட்கொண்டால் கொழுப்பு குறையும். அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது.

குடலைச் சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்றுநோயை அத்திப்பழம் தடுக்கிறது. அத்திப்பழங்களை பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் உடலின் சக்தியை அதிகப்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்