6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (16:15 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகம் கேரளா உட்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
தமிழகத்தை பொறுத்தவரை இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் இந்த ஆறு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் போலவே கேரளாவில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்