சென்னையின் பல இடங்களில் கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

திங்கள், 30 அக்டோபர் 2023 (17:05 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சற்று முன் தான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம்  உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும் இதனால் மழைநீர் சாலையில் ஓடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் திடீரென கனமழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் சென்னை பொருத்தவரை இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்