சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை.. பொதுமக்கள் சிரமம்..!

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (09:06 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பொது மக்கள் சிரமத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே சில மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம், எழும்பூர், சென்ட்ரல், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.  இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்