வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பலி: கணவர், மாமனார் கைது!

Mahendran
புதன், 25 செப்டம்பர் 2024 (11:35 IST)
வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் ஒருவர் பரிதாபமாக பலியான நிலையில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே என்ற பகுதியில் 24 வயது பெண்ணுக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்ய அவரது கணவர் மற்றும் மாமனார் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, நான்கு மாத சிசுவை அவரது குடும்பத்தினரே கருக்கலைப்பு செய்த போது, அந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
 
அது மட்டும் இல்லாமல், இறந்த சிசுவை அவருடைய குடும்பத்தினர் பண்ணை தோட்டத்தில் புதைத்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக, தனியார் மருத்துவர் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
இதை அடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக, கணவர் மற்றும் மாமனாரை கைது செய்த நிலையில், மாமியாரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தனியார் மருத்துவரும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
2017 ஆம் ஆண்டில் திருமணம் ஆன மறைந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருந்ததால், மீண்டும் கர்ப்பமானதால், வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய முடிவு எடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்