சமீபத்தில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அதிபராக வெற்றி பெற்று பதவியேற்ற நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழா இன்று எளிமையாக நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றதை அடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வருகின்றன. கடந்த 1994 ஆம் ஆண்டு, இலங்கையில் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க இருந்த நிலையில், அதன்பின் அடுத்த பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பல ஆண்டுகளாக, அநுர குமார திஸாநாயக்கன் கட்சிக்கு, தேசிய மக்கள் சக்தி கட்சியில் ஹரிணி அமரசூரிய இருந்து வருகிறார். மேலும், ஆட்சிக்கு வந்தால் ஹரிணி அமரசூரிய தான் பிரதமர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.