நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

vinoth

ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (07:17 IST)
வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைப் பெய்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி தத்தளித்து வருகின்றன.

சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் பகுதிகள் சூழ்ந்துள்ள நிலையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்துள்ளது.  இதன் காரணமாக புதுச்சேரி அருகே 70 கி. மீ வேகத்தில் புயல் காற்று வீசியது.

தற்போது புயல் கரையைக் கடந்துள்ளதால் மிதமான மழை இருக்கும் எனவும் அதே நேரம்  புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்