சாவுக்கு வழி காட்டிய கூகிள் மேப்? ஆற்றில் பாய்ந்த கார்! - கேரளாவில் சோகம்!

Prasanth Karthick

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:39 IST)

கேரளாவில் கூகிள் மேப்பை நம்பி காரை ஓட்டிச் சென்ற இருவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மகாராஷ்டிராவை சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே என்ற இருவர் சமீபத்தில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று இரவு கோட்டயத்தில் உள்ள குமரகோம் பகுதியில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவர்கள் எர்ணாக்குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது கைப்புழமுட்டு என்ற பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்தது.

 

இதனால் கார் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் உதவிக்கேட்டு பயணிகள் இருவரும் கூப்பாடு போட்டுள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த அப்பகுதி மக்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஆழமான ஆற்றுப்பகுதி என்பதால் கார் முழுவதுமாக ஆற்றில் மூழ்கியது.
 

ALSO READ: பாலியல் வழக்கு - மலையாள நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு தள்ளுபடி.!!
 

தகவலறிந்து விரைந்த மீட்பு படையினர் க்ரேன் உதவிக் கொண்டு காரை ஆற்றுக்கு உள்ளிருந்து மீட்டனர். காரில் சிக்கியிருந்த இரு பயணிகளும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த பகுதிக்கு புதியவர்கள் என்பதால் கூகிள் மேப் பார்த்து, இரவு நேரத்தில் வழி தெரியாமல் ஆற்றில் தவறாக காரை செலுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்