திசைமாறும் சின்மயானந்தா வழக்கு – புகார் கொடுத்த பெண் கைது !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (08:50 IST)
பாஜக பிரமுகர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய பெண்ணையேக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்தா (72), ஷாஜகான்பூரில் தனது சாமியார் மடத்தினுள் சட்டக்கல்லூரி ஒன்று நடத்திவருகிறார். இவர் அக்கல்லூரில் படிக்கும் மாணவி ஒருவர் அவர் மேல் பாலியல் புகார் கொடுத்ததை இந்திய அரசியலில் விவாதமானது.

அந்த மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் சினமயானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதில்  ’எனக்கு 200 க்கும் மேற்பட்ட முறை போன் செய்து மசாஜ் செய்யச் சொல்லி தொல்லை தந்தார்.என்னை மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையைப் பாழாக்கியுள்ளார் சின்மயானந்தா. என்னை நிர்வாணமாகப் வீடியோ எடுத்து வைத்து மிரட்டினார். அவரிடம் இருந்து விடுபட்டு, அவருக்கு தண்டனை வாங்கித் தர எண்ணி, எனது கண்ணாடியில் கேமரா வைத்து, எவர் எனக்கு தொல்லை  தருவதை  சாட்சியாக பதிவுசெய்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து  இவ்வழக்கை விசாரித்த ஷாஜகான்பூர் கீழமை நீதிமன்றம் சின்மயானந்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ஆனால் அந்தப் பெண் கூறிய புகார்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது திடீரென்று புகார் அளித்த பெண்னையே போலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் புகார் கூறி பணம் பறிக்கத் திட்டமிடுவதாகக் கூறி அவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்