உ.பியில் 40 வருடங்களாக வரி கட்டாத முதல்வர் மற்றும் அமைச்சர்கள் –செய்தி வெளியானதால் புதிய சட்டம் !

சனி, 14 செப்டம்பர் 2019 (12:47 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 38 ஆண்டுகளாக முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தங்களது சொந்த பணத்தில் இருந்து வரி கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு வி பி சிங் ஆட்சியின் போது இயற்றப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின் 19 முதலமைச்சர்கள் மற்றும் 1000 அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த பணத்திலிருந்து வரி கட்டாமல் அரசின் கருவூலத்தில் இருந்து அவர்களுக்கு வரி கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த செய்தி நேற்று ஊடகங்களில் வெளியானதை அடுத்து அவசரமாக யோகி ஆதித்யநாத் தலைமையில் கூடிய கூட்டத்தில் புதிதாக சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் இனி அவர்களின் சொந்த பணத்தில் இருந்து வரிகளைக் கட்ட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்