ரூ.5,000 கோடி நஷ்டத்தில் மேற்கு ரயில்வே... அதிகாரிகள் புலம்பல்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (09:01 IST)
ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பை சந்தித்துள்ளோம் என மேற்கு ரயில்வே அதிகாரிகள் புலம்பல். 

 
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதியில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.‌ இந்நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக ஆண்டு வருமானத்தில் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு ரெயில்வேயின் கீழ் இயக்கப்படும் சில ரெயில்கள் வெறும் 10 சதவீத பயணிகளுடன் இயங்குகின்றன. இதன் காரணமாக நாங்கள் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பை சந்திக்கிறோம் என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்