60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

புதன், 24 பிப்ரவரி 2021 (15:59 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஒத்திகைகளும் நடைபெற்றது. 
 
இந்த நிலையில் தற்போது வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் நாட்டுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மருந்து வழங்க மத்திய அரசு ஆயுத்தமாகியுள்ளது. 
 
அதன்படி  60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் 45 வயதை கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தடுப்பூசி அரசு மையங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்