போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (14:12 IST)
பாலைவன பூமி என்று கூறப்படும் ராஜஸ்தானில் போர்வெல் போட்ட இடத்தில் திடீரென தண்ணீர் பீறிட்டதால் அந்த பகுதி முழுவதுமே வெள்ள காடாக மாறிவிட்டதாகவும் இதனால் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் சோதனை சாவடி நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ராஜஸ்தான் மாவட்டம் ஜெய் சால்மர் என்ற பகுதியில் விக்ரம் சிங் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் போடும் பணி நடைபெற்றது. கிட்டத்தட்ட 850 அடி ஆழத்துக்கு போர் போடப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென தண்ணீர் கொப்பளிக்க தொடங்கியது. தண்ணீர் வந்துவிட்டதை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் தான் மூன்றடி உயரத்துக்கு பெரும் சத்தத்துடன் தண்ணீர் சீறி பாய ஆரம்பித்தது.
 
ஒரு கட்டத்தில் தண்ணீர் பீரிட்டு வருவது நிற்காத நிலையில் அந்த பகுதியே வெள்ளக்காடாக மாறிவிட்டது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்க வந்தபோது போலீசார் தலையிட்டு அந்த இடத்தில் சோதனை சாவடி அமைத்து காவல் காத்து வருகின்றனர்.
 
இன்னும் தண்ணீர் பீரிட்டு கொண்டு வருவதாகவும் இந்த இடத்தில் பழமையான சரஸ்வதி நதி நீரோட்டம் இடம்பெற்று இருக்கலாம் என்றும் அந்த பகுதி மக்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்