ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகமான தொகையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அஸ்வின், கே.எல். ராகுல், ஜடேஜா, நடராஜன் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் நேற்று ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில், அதாவது 13 வயது சிறுவனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. 13 வயது சிறுவன் வைபவ் சூரியவம்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 1.1 கோடிக்கு வாங்கியுள்ளனர். இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.